சென்னை வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு (ANIU) ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் ஜானி செல்லப்பா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
முதலில் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (33) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் போரூர் அருகே உள்ள கோவூரைச் சேர்ந்த வெங்கடேஷ் குமார் (31) என்பவரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியது தெரியவந்தது. போலீசார் ஒரு வாடிக்கையாளர் போல வெங்கடேஷ் குமாரைத் தொடர்பு கொண்டு வலசரவாக்கம் வரவழைத்தனர்.
அவர் காரில் வந்தபோது, அவரைச் சூழ்ந்து பிடித்த போலீசார், காரில் இருந்த நடிகை மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்:அஞ்சு கிருஷ்ணா (30): தமிழ் திரைப்படமான ‘வெள்ளிமலை’ மற்றும் சில மலையாள படங்களில் நடித்துள்ள நடிகை.வின்சி நிவேதா (26): தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருபவர் (நடிகையின் தோழி).வெங்கடேஷ் குமார் (31)கார்த்திக் ராஜா (31) யஷ்வந்த் (25) ஸ்ரீராம் (33)அல்விபின்ஷா (27) விக்னேஸ்வரன் (33)
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன:
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்தக் கும்பல் போதைப்பொருட்களை கேரளா மற்றும் பெங்களூருவில் இருந்து மொத்தமாக வாங்கி வந்துள்ளது அம்பலமானது. இவர்கள் சென்னையில் உள்ள சினிமா நட்சத்திரங்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகளுக்கு (VIPs) ரகசியமாக போதைப்பொருள் விநியோகம் செய்து வந்துள்ளனர்.
“சினிமா வாய்ப்புகள் குறைந்ததால், எளிதாகப் பணம் சம்பாதிக்க இந்தத் தொழிலில் இறங்கியதாக நடிகை தரப்பில் வாக்குமூலம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.”
இவர்களில் கைது செய்யப்பட்ட அஞ்சு கிருஷ்ணா தமிழ் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு வெள்ளிமலை என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பழையனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். கொச்சியில் மாடலாக இருந்தவர், சினிமா ஆசையில் சென்னைக்கு வந்திருக்கிறார். ஜோஜூ ஜார்ஜின் ‘ஆரோ’ உள்ளிட்ட சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் திரையிசையின் முடிசூடா மன்னர்களாக விளங்கி, தங்களின் இசையாலும் குரலாலும் பல தலைமுறைகளைத் தாலாட்டியவர்கள் இசைஞானி இளையராஜா மற்றும் பாடும்…
Actor Vijay Antony is well-known in Tamil cinema for choosing unique storylines and intense characters.…
முதல் பாகத்தில் மனைவியின் குஸ்தி (மல்யுத்தம்) திறமை தெரியாமல் கல்யாணம் செய்து முழிக்கும் விஷ்ணு விஷாலைப் பார்த்தோம்.
தமிழ் சினிமாவின் இசைப் பேரரசர், 'இசைஞானி' இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தனது சமூக வலைத்தளப்…
பிரபல திரைப்பட நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று…
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'சிக்மா' (Sigma).