போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கெனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது வீட்டில் போலீசார் 2 மணி நேரம் சோதனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் கும்பலுக்கும் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு சம்மன் அனுப்பிய நிலையில், அவர் தலைமறைவானார். அதன் பிறகு தனிப்படை போலீசார் கிருஷ்ணாவை தேடி கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது கிருஷ்ணா, “தனக்குப் போதைப் பொருள் பழக்கம் இல்லை. இதய நோய் மற்றும் இரைப்பை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதால் தன்னால் போதைப்பொருள் பயன்படுத்த முடியாது,” என்று கூறியதாக தெரிகிறது. மேலும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள கிருஷ்ணாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருவதாகவும், சோதனைக்கு பின்னர்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…