கொலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தனது இசை வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லை எட்டவிருக்கிறார். புதிதாக சொந்த இசை நிறுவனம் (Music Label) ஒன்றைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ள அனிருத், இந்தப் படத்திற்கு சம்பளமாக பணம் பெறாமல் அதற்கு பதிலாக முழு இசை உரிமைகளையே (Audio Rights) பெற்றுள்ளார். இந்த உரிமைகளை வேறு இசை நிறுவனத்திற்கு விற்பனை செய்யாமல், தானே ஒரு புதிய லேபிளைத் தொடங்கி அதன் மூலம் ‘அரசன்’ படத்தின் அனைத்து பாடல்களையும் வெளியிட அனிருத் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு நில்லாமல், இனி தனது சுயேச்சை சிங்கிள் பாடல்கள் (Independent Singles), ஆல்பங்கள் மற்றும் எதிர்காலத் திரைப்படங்களின் இசை உரிமைகளையும் தனது சொந்த இசை நிறுவனம் மூலமே வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார். இந்த அதிரடி முடிவு தற்போதைய பெரிய இசை நிறுவனங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், கடந்த சில ஆண்டுகளாக அனிருத் இசையமைக்கும் பாடல்கள்தான் (விக்ரம், ஜெயிலர், மாஸ்டர், டான், பீஸ்ட் போன்றவை) இசை நிறுவனங்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்து வருகின்றன. அவர் சொந்த லேபிளைத் தொடங்கினால், இனிவரும் படங்களின் இசை உரிமைகளை அவரே நேரடியாக எடுத்துக் கொள்ளும் சூழல் உருவாகும் என்பதால், பல இசை நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், மிக விரைவில் தனது புதிய இசை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அனிருத் வெளியிடவுள்ளதாக திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரகுமானுக்குப் பிறகு, தமிழ்த் திரையிசை உலகில் இசையமைப்பாளரே சொந்த இசை நிறுவனத்தைத் தொடங்கும் இரண்டாவது பெரும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அனிருத் இசைப் பயணத்தில் இது புதிய அத்தியாயமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!
காத்திருப்போம்… அறிவிப்புக்கு!
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.