லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகி வரும் LCU திரைப்படத்தில், ஏற்கனவே ராகவா லாரன்ஸ், மாதவன் மற்றும் நிவின் பாலி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இன்னொரு இளம் ஹீரோ இணைய இருப்பதாக கூறப்படுவது, இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘பென்ஸ்’. இந்த படம் LCU படம் தான் என இயக்குனர் ஏற்கனவே பேட்டி அளித்த நிலையில், ஹாலிவுட் பாணியில் உருவாகும் புதிய முயற்சி என்றும் கூறப்பட்டது.
ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி ஆகிய இருவரும் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், மாதவன் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தற்போது இளம் ஹீரோ ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, ஹரிஷ் கல்யாண், ‘அந்தாகாரம்’ இயக்குனரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது ’பென்ஸ்’ படத்திலும் அவர் இணைந்துள்ளார். இதனை அடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ என்ற இடத்தை நோக்கி அவர் சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…