ஷார்ட் பிரேக்குக்கு பின் மீண்டும் தமிழில் பிஸியான அழகு ராட்சசி ஆஷ்னா சவேரி!

நடிகை ஆஷ்னா சவேரி மீண்டும் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் பல நடிகைகள்… ஓரிரு படங்களிலேயே சொந்த ஊருக்கு மூட்டையை கட்டும் நிலையில், 10 வருடங்களுக்கு மேலாக, தொடர்ந்து தனக்கு பொருந்தக்கூடிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் தான், மும்பையை சேர்ந்த நடிகை ஆஷ்னா சவேரி. 

2014-ஆம் ஆண்டு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், வெற்றி படமாக அமைந்தது. ஆஷ்னா சவேரி தன்னுடைய அறிமுகப்படத்திலேயே, மென்மையான அழகால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தை தொடர்ந்து, இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா.காம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, போன்ற படங்களில் நடித்தார்.

கடைசியாக தமிழில் இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘கன்னித்தீவு’ என்கிற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். அதே போல் ஹன்சிகா மற்றும் முகேன் ராவ் நடிப்பில், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான ‘MY 3’ என்கிற வெப் தொடரிலும் நடித்திருந்தார். பல கதைகள் தன்னை தேடி வந்தபோதும், தன்னுடைய நடிப்பு திறமையை வெளியே கொண்டுவரக்கூடிய கதைக்காகவும், அழுத்தமான கதாபாத்திரத்திற்காகவும் காத்திருந்தார்.

ஆஷ்னா எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போலவே தமிழில் தற்போது இவர் நடித்து வரும் ‘திரைவி’ திரைப்படம் அமைந்துள்ளது. இதுவரை தமிழில் எடுக்கப்படாத, வித்தியாயாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஆஷ்னாவும் மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

‘திரைவி’ திரைப்படத்தில் ஆஷ்னா சவேரி ஒருபக்கம் பிசியாக நடித்து வரும் நிலையில், இவர் பச்சை நிற லெஹங்கா அணிந்தபடி மாடர்ன் லுக்கில் மனதை மயக்கும் விதத்தில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

4 வாரங்கள் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago