கவனம் ஈர்க்கும் மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘அதர்ஸ்’ !

இளைய தலைமுறையின் கதை சொல்லல், காட்சியமைப்பு மற்றும் நடிப்புத் திறமைகள் மூலம் புதிய பரிமாணங்களை நோக்கி பாய்ந்து வரும் தமிழ் சினிமாவில், புதிய படைப்பான  ‘அதர்ஸ்’  மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய அறிமுகம் ஆதித்யா மாதவன், கடமை உணர்வுமிக்க காவல் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 96, மாஸ்டர் போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையால் பாராட்டைப் பெற்ற கவுரி G. கிஷன், இப்படத்தில்  மருத்துவராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதர்ஸ் படத்தில் அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R.சுந்தர்ராஜன் உள்ளிட்ட வலுவான நடிகர் பட்டாளம்  இணைந்து நடித்துள்ளனர்.

டிமாண்டி காலனி புகழ் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, தீரன் அதிகாரம் ஒன்று, உத்தம வில்லன், துணிவு போன்ற புகழ்பெற்ற படங்களுக்கு  இசையமைத்த ஜிப்ரான், பாடல்களும், பின்னணி இசையும் அமைத்துள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி, லவ்வர், லப்பர் பந்து போன்ற ஹிட் ஆல்பங்களைத் தந்த மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அசுரன், விடுதலை போன்ற படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய எடிட்டர் ராமர், இந்தப் படத்தை  எடிட் செய்துள்ளார். உமா சங்கர் வடிவமைத்த செட் டிசைன்கள், படத்தின் கதைக்கு உயிர் ஊட்டியுள்ளது.

தமிழ் திரையுலகிற்கு வருகை தரும் புதிய திறமைகளை வரவேற்று முன்னணி நட்சத்திரங்கள் வெங்கட் பிரபு, ஆர்யா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன், இரா சரவணன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர், சமூக ஊடகங்களில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர்.

கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) முரளி தயாரிப்பிலும், கார்த்திக் G இணைத் தயாரிப்பிலும், முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள “அதர்ஸ்” திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

நடிப்பு, கதை, தொழில்நுட்பம் என எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும்  “அதர்ஸ்“  திரைப்படம் பார்வையாளர்களை கவரத் தயாராகவுள்ளது.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

3 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

4 வாரங்கள் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago