ரவி மோகன், ஆர்த்தி இருவருக்கும் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்.. முழு விவரங்கள்..!

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என்று ஆர்த்தி ரவி நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஜூன் மாதம் விசாரணைக்கு வரும் என்று குறிப்பிடப்படுகிறது.

இதற்கிடையில், திருமண நிகழ்ச்சிகளில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் கலந்து கொண்டது குறித்து ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு பதிலாக, ரவி மோகன் தனக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவிக்க மனைவி ஆர்த்திக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தனர். நீதிமன்றம் இரு தரப்பிலும் எந்தவிதமான அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க கூடாது என்றும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அறிக்கைகளை நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், இனிமேல் இரு தரப்பும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பகிரக்கூடாது என்றும் கூறியது.

இரு தரப்பினரும் தேவையில்லாத கருத்துக்களை பொது வெளியில் வெளியிட கூடாது என்றும், ஏதேனும் சொல்ல வேண்டிய கருத்துகள் இருந்தால் அதை நீதிமன்றத்தில் நேரில் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

1 மாதம் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago