‘டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக  நடிக்கும், புதிய படத்தின்  டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது  !!

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை  “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் இயக்கி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் தான் இப்படம்  அறிவிக்கப்பட்ட நிலையில், படக்குழு படு வேகமாக படப்பிடிப்பை முடித்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் துவக்கியுள்ளது. இது திரையுலகினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்   படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். k.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.  

டப்பிங் பணிகள் துவங்கிய நிலையில், விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு  திட்டமிட்டு வருகிறது.

anbuselvid8bbe9c60f

Share
Published by
anbuselvid8bbe9c60f

Recent Posts

பொங்கல் ரேஸில் இணைந்த ‘வா வாத்தியார்’: கார்த்தி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

நடிகர் கார்த்தி நடிப்பில், 'சூது கவ்வும்' புகழ் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் பல…

2 நாட்கள் ago

பொங்கல் ரேஸில் இணைந்த ‘திரௌபதி 2’

2020-ம் ஆண்டு வெளியான 'திரௌபதி' திரைப்படம் பெரும் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார்.

2 நாட்கள் ago

யஷ்-கீது மோகன்தாஸ் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு: மயானத்தில் கார் சீன் சர்ச்சை – பெண் இயக்குநருக்கு பின்னடைவு!

கே.ஜி.எஃப் வெற்றிக்குப் பிறகு கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியான டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்…

3 நாட்கள் ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கை வழக்கு ஜன.21க்கு ஒத்திவைப்பு!

சென்னை, ஜனவரி 9, 2026: நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கில்,…

3 நாட்கள் ago

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்: ஜனவரி 10-ஆம் தேதி பொங்கல் ரிலீஸ் உறுதி!

நீண்ட இழுபறிக்குப் பிறகு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி திரைப்படத்துக்கு மத்திய திரைப்படத் தணிக்கை…

3 நாட்கள் ago

பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் அதிர்ச்சி ட்விஸ்ட்: கானா வினோத் 18 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், ரசிகர்களால் டைட்டில் வின்னராக வலுவாக எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத் ஒரு…

3 நாட்கள் ago