பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரிலும் புகைப்படத்திலும் போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி மோசடி செய்ய முயற்சிப்பதாக நடிகை தானே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஸ்கிரீன்ஷாட்டுடன் பதிவிட்ட ரகுல், “என்னைப் போலவே வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம் செய்து யாரோ ஒருவர் மற்றவர்களுடன் சாட் செய்து வருவது தெரியவந்துள்ளது. அது நான் இல்லை… அது என்னுடைய எண் கூட இல்லை! அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். உடனே ‘பிளாக்’ செய்துவிடுங்கள்” என்று தெளிவாக எழுதியுள்ளார்.
இதற்கு முன்பு நடிகை அதிதி ராவ் ஹைதாரி, ஸ்ரேயா உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்கள் பெயரில் உருவாக்கப்பட்ட போலி கணக்குகளால் பாதிக்கப்பட்டதாக பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களும் பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு ரகுல் ப்ரீத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். இது போன்ற மோசடி கணக்குகளை உடனடியாக வாட்ஸ்அப் நிறுவனத்திடமும் புகார் அளிக்குமாறு ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.