பிரபல தமிழ் இயக்குநர் வி.சேகர் காலமானார்

தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவான வி.சேகர் (63), உடல்நலக்குறைவால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். கடந்த 10 நாட்களாக அவர் கடுமையான நிலையில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருவண்ணாமலை அருகே உள்ள நெய்வனத்தம் கிராமத்தில் பிறந்த வி.சேகர், பட்டம் பெற்ற பிறகு சுகாதாரத் துறையில் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர், பி.லெனின் மற்றும் கே.பாக்யராஜ் போன்றவர்களின் ஊக்கத்தால் திரைப்படத் துறைக்கு நுழைந்தார். 1990இல் நீங்களும் ஹீரோதான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அவரது படங்களில் விரலுக்கேத்த வீக்கம், காலம் மாறி போச்சு, எல்லாம் என் பொண்டாட்டிதான், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, புரந்த வீட புகுந்த வீட போன்றவை பிரபலமானவை. நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளைப் சித்தரிப்பதில் அவர் தனித்திறன் பெற்றவர். திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், துறைக்கு பங்களிப்பு செய்தவராகவும் அறியப்படுகிறார்.

வி.சேகரின் மறைவு தமிழ் திரைப்படத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு திரைப்பட வட்டாரம் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளனர். இறுதிச் சடங்குகள் இன்றே நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது.

வி.சேகரின் படைப்புகள் தமிழ் சினிமாவின் நகைச்சுவைப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவை என்பதால், அவரது இழப்பு ரசிகர்களுக்கு மறக்க முடியாததாக இருக்கும்.

Natarajan Karuppiah

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

4 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

3 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago