‘இறுதிப்பக்கம்’ மற்றும் ‘டியர் ரதி’ ஆகிய கவனிக்கத்தக்கத் திரைப்படங்களைத் தொடர்ந்து, Insomniac’s Dream Creations நிறுவனம் தனது மூன்றாவது தயாரிப்பை (Production No. 3) பிரம்மாண்டமான பூஜையுடன் தொடங்கியுள்ளது.
முந்தைய படமான ‘இறுதிப்பக்கம்’ மூலம் ஒரு நேர்த்தியான மர்டர் மிஸ்டரியைக் கொடுத்த இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், இப்படத்தின் மூலம் மீண்டும் திரில்லர் பாணிக்கே திரும்பியுள்ளார். ஆனால், இது வழக்கமான பாணியில் அமையாமல், தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய தளத்தில், ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தைத் தரும் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகவுள்ளது.
இப்படத்தில்’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் குமார சம்பவம் புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா நடிக்க, ராஜேஷ் பாலசந்திரன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
திருச்சி மற்றும் பெரம்பலூரில் படப்பிடிப்பு முழுக்க முழுக்க எமோஷனல் மற்றும் விறுவிறுப்பு நிறைந்த திரைக்கதையைக் கொண்ட இக்கதை, திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சுற்றியே நகர்கிறது. எனவே, எதார்த்தமான சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் அந்தப் பகுதிகளிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். படத்தில் பங்கேற்கவுள்ள மற்ற நடிகர்கள் & கலைஞர்கள் மற்றும் பிற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…