திரைப்பட செய்திகள்

“கே டி: தி டெவில் ” படத்திலிருந்து திற நீ எந்தன் தரணி திற நீ பாடல் மூலம் கொண்டாட்டத்தின் உச்சத்தை வழங்குகிறார் நோரா ஃபதேஹி

இப்படத்தில் ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.‌

விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ‘திற நீ எந்தன் தரணி திற நீ – Thira Nee Enthan Tharani Thira Nee” எனும் துள்ளல் மிகுந்த மற்றும் உற்சாகமான ஒரு நடனப் பாடலை வெளியிட்டுள்ளனர். அதிரடியான தாளமும் கொண்டாட்ட மனநிலையையும் கொண்ட இந்த பாடல் ரசிகர்களிடையே ஒரு முக்கியமான ‘பார்ட்டி கீதம்’ ஆக ( Party Anthem) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பான பாலிவுட் நடன தாரகை நோரா ஃபதேஹி மற்றும் வசீகரமான நட்சத்திர நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த பாடல் – கவர்ச்சி – திரையில் இருவரின் ஆளுமை மிக்க தோற்றம்- விறுவிறுப்பான நடன அசைவுகள் – ஆகியவற்றை கொண்டுள்ளது. அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இந்தப் பாடல் பல்வேறு மொழி பேசும் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதியும் வகையிலான ஒரு ஈர்க்கக்கூடிய தாள லயத்தை கொண்டுள்ளது.

துடிப்புமிக்க பாடகி ராஜலட்சுமி இந்தப் பாடலைப் பாடியுள்ளார். அவரது உற்சாகமான குரல் பாடலின் கொண்டாட்ட மனநிலைக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. பாடலின் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இசை அமைத்தல் – இசை ஒருங்கிணைப்பு மற்றும் பாடல் தயாரிப்பு பணிகளை அர்ஜுன் ஜன்யா மேற்கொண்டுள்ளார்.

‘திற நீ எந்தன் தரணி திற நீ ‘ பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரசிகர்களின் ஃபிளேலிஸ்டிலும் ( Playlists) , நடன மேடைகளிலும் இந்தப் பாடல் விரைவில் இடம் பிடிக்கும் என படக் குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.

கே டி : தி டெவில் – KD : The Devil ‘ திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது.

Natarajan Karuppiah

Share
Published by
Natarajan Karuppiah
Tags: KD

Recent Posts

மீண்டும் இணையும் ‘மஹாராஜா’ கூட்டணி: இரண்டாம் பாகத்திற்காக தயாராகும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில், கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் 'மஹாராஜா'.

2 நாட்கள் ago

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !!

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள "நீ…

2 நாட்கள் ago

அஜித்தின் ரேசிங் ஆர்வத்திற்கு அங்கீகாரம்: மஹிந்திரா வழங்கிய உலகின் முதல் ‘Formula E’ தீம் SUV!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமாருக்கு, மஹிந்திரா குழுமம் ஒரு சிறப்பான கௌரவத்தை…

3 நாட்கள் ago

எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சைப் பேச்சு: வருத்தம் தெரிவித்த நடிகர் ராஜேந்திர பிரசாத்!

ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில், பழம்பெரும் தெலுங்கு நடிகர் காந்தா ராவ் குறித்துப் பேசுகையில், தமிழக முன்னாள்…

3 நாட்கள் ago

‘ஜனநாயகன்’ படத்திற்குத் தொடரும் சிக்கல்: அமேசான் நிறுவனம் அதிரடி முடிவு!

தளபதி விஜய் தனது அரசியல் வருகைக்கு முன்னதாக நடித்துள்ள கடைசித் திரைப்படம் என்பதால், 'ஜனநாயகன்' மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு…

4 நாட்கள் ago

எம்.ஜி.ஆர் குறித்த சர்ச்சை பேச்சு: தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்திற்கு விஷால் எதிர்ப்பு

தெலுங்குத் திரையுலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பில் ஜம்பவானாகத் திகழும் நடிகர் ராஜேந்திர பிரசாத், சமீபத்திய விழா ஒன்றில் பேசிய…

4 நாட்கள் ago