திரைப்பட செய்திகள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத், இனையும் “ஸ்லம் டாக் – 33  டெம்பிள் ரோடு” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிறந்தநாள் கொண்டாட்டமாக  “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ( Slum Dog 33 Temple Road) )ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர், ஜே.பி.   நாராயண் ராவ் கொண்ட்ரோலா, பூரி கனெக்ட்ஸ், ஜே.பி. மோஷன் பிக்சர்ஸ் (JB Motion Pictures’ Film ) இணையும் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு”  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா முயற்சி #PuriSethupathi, திரைப்படம், ஸ்டைலிஷ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் அதிரடி கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB Motion Pictures நிறுவனத்தின் JB  நாராயண் ராவ்   கொண்ட்ரோலா  (JB Narayan Rao Kondrolla) இணைந்து தயாரிக்கிறார்.

விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று  வெளியிட்டுள்ளது. “ஸ்லம் டாக்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு “33 டெம்பிள் ரோடு” என்ற டேக்லைன் வழங்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கலைந்த முடி மற்றும் தாடியுடன், பிச்சைக்காரன் உடையில், நீளமான ஸ்கார்ஃப் மற்றும் பூட்ஸ் அணிந்து, மங்கலான வெளிச்சம் மற்றும் பனிமூட்டம் சூழ்ந்த குடிசைப் பகுதியில், கையில் பெரிய கதையை பிடித்தபடி, சுற்றிலும் பணக்கட்டுகள் பறக்கும் நிலையில் விஜய் சேதுபதி ஒரு வெறித்தனமான அவதாரத்தில் தோன்றுகிறார். இந்த டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும்  இப்படத்தின் ஆக்சன் எண்டர்டெய்னர் தன்மைக்கு, பெரும் ஹைப்பை உருவாக்குகின்றன.

தன் நாயகர்களை தனித்துவமான மேக்கோவர்களுடன் மாஸாக உருவாக்குவதில் பெயர் பெற்ற பூரி ஜெகன்னாத், இந்த படத்திலும் அதை நிரூபித்துள்ளார். விஜய் சேதுபதி, இதுவரை தனது திரை வாழ்க்கையில் முயற்சிக்காத, முற்றிலும் புதிய ஒரு பாத்திரத்தில் இப்படத்தில் தோன்றுகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.மேலும், பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை பாத்திரங்களில் கலக்கியுள்ளனர்

அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களில் துடிப்பான இசையமைப்பை வழங்கிய தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்,  படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படம், தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. நடிகர்கள் :மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய்குமார்.

Natarajan Karuppiah

Share
Published by
Natarajan Karuppiah

Recent Posts

‘மரகத நாணயம் 2’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2017-ல் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற கல்ட் ஹிட் படம் ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது அதிகாரப்பூர்வமாக…

8 மணத்தியாலங்கள் ago

நலன் குமாரசாமியின் அடுத்த படங்கள்: ‘சாமுண்டீஸ்வரி’ மற்றும் விஜய் சேதுபதியுடன் ‘கைநீளம்’!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான ‘வா வாத்தியார்’ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பொங்கல் விடுமுறையால் நல்ல…

8 மணத்தியாலங்கள் ago

தனுஷின் அடுத்த படம் (D55) ஓடிடி உரிமை படப்பிடிப்பு தொடங்கும் முன்பே நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் அடுத்ததாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணையும் படம் (தற்போது D55…

8 மணத்தியாலங்கள் ago

வி.ஜே. சித்துவின் இயக்குநர் அறிமுகப் படம் ‘டயங்கரம்’: பொங்கல் சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பிரபல யூடியூபர் மற்றும் நடிகர் வி.ஜே. சித்து (VJ Siddhu), தனது முதல் இயக்குநர் முயற்சியாகவும், கதாநாயகனாகவும் நடித்து வரும்…

8 மணத்தியாலங்கள் ago

அருள்நிதியின் ‘அருள்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் சினிமாவில் உள்ளடக்கம் நிறைந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி, தற்போது புதிய படமொன்றின் மூலம் ரசிகர்களை எதிர்நோக்க…

9 மணத்தியாலங்கள் ago

தேவி ஶ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகம்: ‘எல்லம்மா’ படத்தில் கதாநாயகனாக உருவெடுக்கிறார்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஹிட் பாடல்களை அள்ளி வீசி வரும் ராக்ஸ்டார் தேவி ஶ்ரீ…

9 மணத்தியாலங்கள் ago