திரைப்பட செய்திகள்

பள்ளிச்சட்டம்பி  திரைப்படத்தில் கயாடு லோஹரின் விண்டேஜ்  தோற்றம் வெளியானது

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ்  கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி எனும் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் ( Kayadu Lohar ) கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது நடிகையின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த போஸ்டரில் கயாடு லோஹர் ஒரு விண்டேஜ்  தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

இருப்பினும் படத்தில் அவரது கேரக்டரின் பெயரை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.கன்னட திரைப்படமான ‘முகில்பேட் ‘ ( Mugilpete) படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தைக் கவர்ந்தது. பின்னர் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’ எனும் தமிழ் திரைப்படம் – அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பள்ளிச்சட்டம்பி – கயாடு லோஹரின் மூன்றாவது மலையான திரைப்படமாகும். துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ எம் கேம்’ படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. கயாடு லோஹர் பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் பள்ளிச்சட்டம்பி திரைப்படம்-  ஏப்ரல் மாதம் 9 தேதி வெளியாகிறது. வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் ( Worldwide Films) மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் ( C Qube Bros Entertainment) ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம்  ஒரு முழுமையான மாஸான ஆக்சன் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோஷன் போஸ்டர் – டைட்டில் போஸ்டர் மற்றும் டொவினோ தாமஸ் தற்காப்பு கலைகளில் பயிற்சி பெறும் வீடியோக்கள்.. ஆகிய அனைத்தும் வெளியாகி, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கின்றன.

இப்படத்தை வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் நௌஃபல் ( Noufal) மற்றும் பிரிஜீஷ் ( Brijeesh ), இவர்களுடன் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சானுக்யா – சைதன்யா-  மற்றும் சரண் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மேகா ஷியாம் மற்றும் தன்சீர் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். திரைக்கதையை எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். பள்ளிச்சட்டம்பி எனும் இந்த திரைப்படம் 1950-60 காலகட்டத்தில் கேரளாவில் நடக்கும் ஒரு கதையை சொல்கிறது. டொவினோ தாமஸ் மற்றும் கயாடு லோஹர்ருடன் விஜயராகவன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

4 வாரங்கள் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago