வரவேற்பைக் குவித்து வரும் “ரஜினி கேங்” ஃபர்ஸ்ட் லுக்

MISHRI ENTERPRISES  திரு செயின்ராஜ் ஜெயின் அவர்களின் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற “ஜெய்ஹிந்த்” (முதல் பாகம்) மற்றும் சமீபத்தில் வெளியான “அஷ்டகர்மா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில் கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம்  “ரஜினி கேங்”.  

நேற்று வெளியான இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

மறைந்த எஸ். செயின்ராஜ் ஜெயின் அவர்களால் நிறுவப்பட்ட MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட பைனான்ஸ்,  விநியோகம் மற்றும் தயாரிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஜெய் ஹிந்த், அஷ்டகர்மா ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி கேங் அவர்களின் மூன்றாவது பெரிய தயாரிப்பாக, பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில்,  அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள்,  அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக  இப்படம் உருவாகியுள்ளது.

பிஸ்தா திரைப்படம் மற்றும் உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை  இயக்கிய இயக்குநர் M ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். 

இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக திவிகா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அசத்தியுள்ளது. 

பொறியாளன், போங்கு, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் 4 அற்புதமான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. 

இப்படத்தின் டைட்டில்  டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து 2.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின்  படப்பை,  மறைமலைநகர் போன்ற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது. 

தொழில் நுட்ப குழு 
இயக்கம் : M. ரமேஷ் பாரதி
இசை : M.S. ஜோன்ஸ் ரூபர்ட்
எடிட்டிங் : R K . வினோத் கண்ணா 
ஒளிப்பதிவு : N. S. சதீஷ்குமார் 
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

Natarajan Karuppiah

Share
Published by
Natarajan Karuppiah

Recent Posts

மீண்டும் இணையும் மெகா கூட்டணி: சிவகார்த்திகேயன் – கமல்ஹாசன் இணையும் ‘சேயோன்’!

'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…

15 மணத்தியாலங்கள் ago

48 வயதிலும் குறையாத அழகு: அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடும் மகள்! நெகிழ்ச்சியில் சுரேகா வாணி

திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி

19 மணத்தியாலங்கள் ago

“லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” LSS பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…

23 மணத்தியாலங்கள் ago

“திருமணம் வதந்திதான்” – மிருணாள் விளக்கம்

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…

4 நாட்கள் ago

அப்பா சிரித்த அந்தச் சிரிப்பை மறக்கவே மாட்டேன்!: 18 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின் சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

4 நாட்கள் ago

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: சாய் பல்லவியின் புதிய அவதாரம்

இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…

5 நாட்கள் ago