திரைத்துறை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் 1965-களின் மொழிப் போராட்டத்தை மையமாக வைத்து வெளியான ‘பராசக்தி’ திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கடந்த ஜனவரி 10-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளியான 11 நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூலை எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தனது திரைப்பயணத்தில் ஹாட்ரிக் 100 கோடி வசூல் படங்களைக் கொடுத்த நடிகராக உருவெடுத்துள்ளார்.
‘சூரரைப் போற்று’ புகழ் சுதா கொங்கராவின் நேர்த்தியான இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. சிவகார்த்திகேயனின் முதிர்ச்சியான நடிப்பு, வில்லனாக மிரட்டிய ரவி மோகன் (ஜெயம் ரவி), அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரின் பங்களிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100-வது படமான இதில், பின்னணி இசை மற்றும் பாடல்கள் மொழிப் போராட்டத்தின் உணர்வை அப்படியே திரையில் கொண்டு வந்தன.
மக்கள் மத்தியிலும், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’, கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் வசூல் ரீதியாகத் தன்னை ஒரு வெற்றித் திரைப்படமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்து வார நாட்களிலும் படம் கணிசமான வசூலை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.