‘சூப்பர் ஸ்டார் ரஜினி’ என்ற பட்டம் வெள்ளித்திரையில் தோன்றும்போது திரை அரங்கமே அதிரும் என்பதை சென்னையில் பலமுறை பார்த்திருக்கிறேன். தலைமுறைகள் மாறினாலும், இந்த மகிழ்ச்சி குறையவில்லை. இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வென்ற உச்ச நாயகன் திரு.ரஜினிகாந்த் அவர்கள். ஒரு நடிகராக ஐந்து தசாப்தங்கள் நிறைவு செய்துள்ளார் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. தனது திரைப்பட வாழ்க்கையில் பொன்விழாவைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நடிகராக அவரது பயணம் பலருக்கு உத்வேகமாக இருந்து வருகிறது. அவர் வில்லனாக நடித்தாலும் சரி, ஹீரோவாக நடித்தாலும் சரி, திரு. ரஜினிகாந்த் அவர்கள் தனக்கென உரிய பாணியில் நடித்து பார்வையாளர்கள் மனதில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். அவர் தனது நடை, வசனங்கள் மற்றும் சைகைகளில் தனித்துவத்தைக் காட்டுகிறார். புதிய தலைமுறையிலும் திரு. ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலுக்கு ரசிகர்கள் உள்ளனர். ஒரு நடிகராக தனது வாழ்க்கையின் உச்சத்தை எட்டிய திரு.ரஜினிகாந்த், மகாவதார் பாபாஜியின் பக்தராக ஆன்மீக விஷயங்களிலும், யோகா பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்துகிறார், இது அவரது பக்தி மற்றும் மத நம்பிக்கையை காட்டுகிறது. ஒரு நடிகராக தனது பொன் விழாவைக் கொண்டாடும் திரு. ரஜினிகாந்த், இன்னும் பல வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பார் என்று நம்புகிறேன். திரு.ரஜினிகாந்திற்கு முழுமையான ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் வழங்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
(பவன் கல்யாண்)
துணை முதல்வர்
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…