கூலி படத்தின் கொண்டாட்டம், Sun NXT ல் முன்னதாகவே துவங்குகிறது !!

‘கூலி அன்லீஷ்ட் பிரிவியூ’ ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு Sun NXT – இல்  கண்டுகளியுங்கள். 

கூலி படக்  கவுண்டவுன் கூலி அன்லீஷ்ட் பிரிவியூவுடன்,  Sun NXT – இல் தொடங்குகிறது.

இந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, கூலி படத்தின் பிரீவியூவைப் பார்க்கத் தயாராகுங்கள் –  கூலியின் மனதைக் கவரும் கொண்டாட்டத்தின் ஒரு அதிரடியான முன்னோட்டத்தை, நட்சத்திரங்களுடனான விழாவைக்  கண்டுகளிக்கத் தயாராகுங்கள். ஆரவாரமான ரசிகர்கள் மற்றும் தொழில்துறை ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்த விழா, ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதை விடவும், மிகப்பெரியக் கொண்டாட்டம்.  கூலி படத்தின் கவுண்டவுன் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது.

இந்த விழா உலகெங்கிலும் உள்ள தென்னிந்திய திரைப்பட ஆர்வலர்கள் கண்டுக்களிக்கும் வகையில் Sun NXT, இல் ஒளிபரப்பாகிறது.

ரெட் கார்பெட் துவங்கிய தருணத்திலிருந்தே, உற்சாகம் துவங்கி விட்டது. ரசிகர்களின் காதைப் பிளக்கும் ஆரவாரத்துடன் நட்சத்திரங்கள் விழா அரங்கிற்குள் நுழைந்தனர். இசை அரங்கம் முழுக்க அதிரும் பலத்துடன் ஒலித்தது, மேலும் கூலி படத்தில் உழைத்த  பிரபலங்கள் கலைஞர்கள்,  கூலி படத்தின் இசை மற்றும் படத்தின் மாயாஜாலத்தைக் கொண்டாட மேடை ஏறியதும், ரசிகர்கள் மத்தியில்  உற்சாகம் கரை புரண்டு ஓடியது. 

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ருதி ஹாசன் படத்தில் பணிபுரிந்த தருணங்களை மற்ற நடிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் நடிகர் சத்யராஜ்,  நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்றியது குறித்து நினைவு கூர்ந்தார். இந்தியா முழுவதும் ஏற்கனவே இசை  தரவரிசையில் முன்னணி இடம்பிடித்த அனிருத்தின் கூலி ஆல்பம், அரங்கை அதிர வைத்தது. சௌபின் ஷாஹிர் மோனிகா பாடலுக்கு நடனமாட, கூட்டம் உற்சாகக் கூக்குரல் எழுப்பியது. தெலுங்கு ஐகான் நாகார்ஜுனா, ஒரு ஹீரோவின் வரவேற்போடு அரங்கில் நுழைந்து ரசிகர்களைக் கவர்ந்தார்.  பழம்பெரும் இயக்குநர்  எஸ்பி முத்துராமன் சாரின் இதயப்பூர்வமான பேச்சு, ரஜினிகாந்த் வெறும் நட்சத்திரம் அல்ல – அவர்  நம்மில் நிறைந்திருக்கும்  ஒரு உணர்வு என்பதை நமக்கு நினைவூட்டின.

நீங்கள் தமிழ் பிளாக்பஸ்டர்கள், தெலுங்கு ஆக்ஷன் படங்கள், மலையாள கிளாசிக் படங்கள் அல்லது கன்னட வெகுஜன பொழுதுபோக்குப் படங்கள் என எதன் ரசிகராக இருந்தாலும் சரி, இந்த நிகழ்வு, வேறு எந்த நிகழ்ச்சியிலும் இல்லாத வகையில், அகில இந்திய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாக, உங்களை மகிழ்விக்கும். 

இவ்விழா தனித்துவமான, உணர்ச்சிவசமான, மிகப்பெரிய நிகழ்ச்சி. இவ்விழா ஆகஸ்ட் 10, காலை 10 மணிக்கு, சன் NXT இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

‘கூலி அன்லீஷ்ட் பிரிவியூ’ நேரம் மற்றும் தேதி: 10 ஆகஸ்ட், காலை 10 மணி Sun NXT இல் ஒளிபரப்பாகிறது ஆனால் அது மட்டும் இல்லை.

அதே நாள் மாலை 6:30 மணிக்கு, சன் டிவியில் முழு நிகழ்ச்சியையும் பாருங்கள், இது சன் NXT இன் நேரடி தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகவுள்ளது.

கூலி அன்லீஷ்ட் நிகழ்வின் முழு நிகழ்வையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள் -, தடையற்ற மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைப் பெறுங்கள். Sun NXT கூலி கொண்டாட்டத்தைத் தொடங்குகிறது – முதல் காட்சியைத் தவறவிடாதீர்கள்.

Watch on – https://www.sunnxt.com/home

இப்போதே Sun NXT-க்கு சந்தா செய்து, திரையை தீப்பிடிக்க வைக்கும் தருணத்தைக் காணுங்கள். ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு கொண்டாட்டம் தொடங்குகிறது. அது தொடங்கும் போது,  அங்கே இருங்கள்.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

3 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

4 வாரங்கள் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago