‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபிநய் காலமானார்!

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படங்களில் ஒன்றான 2002ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் தனுஷ் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் அபிநய் (அபிநய் கிங்கர்). இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியான இப்படம் தனுஷ், ஷெரின் உடன் அபிநயையும் அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு ‘ஜங்ஷன்’, ‘சிங்கார சென்னை’, ‘சக்சஸ்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘தாஸ்’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், சிலவற்றில் நாயகனாகவும் நடித்து வந்தார். மலையாள படங்களிலும் நடித்த அபிநய், வித்யுத் ஜாம்வால் (துப்பாக்கி, அஞ்சான்), மிலிந்த் சோமன் (பையா) போன்றோருக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணியாற்றினார்.

44 வயதான அபிநய், கடந்த சில மாதங்களாக கல்லீரல் சிரோசிஸ் (Liver Cirrhosis) நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உயிரைக் காப்பாற்ற ரூ.28 லட்சம் தேவை என அவர் வீடியோ வெளியிட்டு உதவி கோரிய நிலையில், நடிகர் தனுஷ் ரூ.5 லட்சமும், KPY பாலா ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கினர். இதனால் ஓரளவு நலமடைந்த அபிநய், சில சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 10, 2025) அதிகாலை 4 மணி அளவில் அபிநய் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பெரிய அளவில் உறவினர்கள் இல்லை எனவும், ஓரிரு நண்பர்கள் மட்டுமே உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை ரங்கராஜபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த அபிநயின் உடல், போலீசார் உதவியுடன் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குக்கு கூட உறவினர்கள் இல்லாத நிலை தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய விருது பெற்ற மலையாள நடிகை டி.பி. ராதாமணியின் மகனான அபிநய், தாயார் 2019இல் புற்றுநோயால் இறந்த பிறகு நிதி ரீதியாகவும், உடல்நல ரீதியாகவும் பெரிதும் அவதிப்பட்டார். அரசு மெஸ்ஸில் உணவு உண்டு வாழ்ந்த நாட்களும் உண்டு என அவர் கூறியது ரசிகர்களை வருத்தமடையச் செய்தது.

அபிநயின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் இழப்பாக கருதப்படும் இந்த சோகம், நடிகர்களின் வாழ்க்கை எத்தகைய போராட்டங்களை கொண்டிருக்கும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.

இளைப்பாறட்டும் அபிநய்…

anbuselvid8bbe9c60f

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

1 வாரம் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

4 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago