இன்று வெளியாகும் ‘தக்லைஃப்’ பாடல்.. சுகர் பேபி என்றால் சர்ச்சைக்குரிய விஷயமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தக்லைஃப்’ திரைப்படம் ஜூன் 5ம் தேதி  பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா நடந்த நிலையில், தற்போது படக்குழுவினர் மும்பையில் உள்ளனர். அது மட்டும் இல்லாமல், இன்று இந்த படத்தில் இடம்பெற்ற ‘சுகர் பேபி’ என்ற பாடல் ரிலீஸ் ஆக இருக்கிறது.

‘சுகர் பேபி’ பாடல் ப்ரோமோ வீடியோவில் த்ரிஷா இடம்பெற்றிருக்கும் காட்சிகள் உள்ளதை அடுத்து, ஒரு சர்ச்சை எழலாம் என்று கூறப்படுகிறது. அதாவது ‘சுகர் பேபி’ என்றால், வயதான ஆணுடன் பொருளாதார மற்றும் உடல் ரீதியான தேவைகளுக்காக வாழும் ஒரு பெண்ணை குறிக்கும் என்று பொருள் என கூறப்படுகிறது.

இந்த பாடலில் ‘சுகர் பேபி’ என்ற வார்த்தை வருவதால், த்ரிஷாவின் கேரக்டர் சர்ச்சைக்குரியதாக இருக்குமா என்ற எண்ணம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியானவுடன்  இது குறித்த சர்ச்சைகள் எழுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் படங்கள் தனித்தனியாக வெளியானாலே சர்ச்சைகள் ஏற்படும் நிலையில், இப்போது இருவரும் இணைந்துள்ள ஒரு படத்தில் ஒரு சர்ச்சை கூட இல்லாமல் இருந்தால் எப்படி? என்றும் ரசிகர்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மொத்தத்தில், இந்த பாடல் சர்ச்சையை ஏற்படுத்துமா, அல்லது ரசிகர்கள் அதை அசால்டாக கடந்து போவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

4 வாரங்கள் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago