மீண்டும் இணைந்த விஜய் ஆண்டனி – சசி.. ‘பிச்சைக்காரன் 3’ உருவாகிறதா?

’பிச்சைக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக இணைந்த நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குனர் சசி, மீண்டும் இணைய இருக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ’பிச்சைக்காரன்’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில், சசி இயக்கத்தில் உருவான ’பிச்சைக்காரன்’ திரைப்படம் வெளியானது என்பதும், இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே.

தமிழை விட தெலுங்கில் இந்த படம் பல மடங்கு வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் ’பிச்சைக்காரன் 2’ திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகி, ஓரளவு வெற்றி பெற்றது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் இயக்குனர் சசி மற்றும் விஜய் ஆண்டனி இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன், நடிகர் அஜய் திஷான் என்பவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பதும், அவர் விஜய் ஆண்டனியின் நெருங்கிய உறவினர் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து, இதில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளிவரும்.

மேலும், இது ’பிச்சைக்காரன்’ படத்தின் அடுத்த பாகமா? அல்லது தனி கதையா என்பது குறித்த தகவலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், இந்த வெற்றி கூட்டணியை தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

4 வாரங்கள் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago