தென்னிந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த தருணம் இதோ வந்துவிட்டது. ‘கீதா கோவிந்தம்’ படத்தில் தொடங்கிய இவர்களது திரையிசை வேதியியல் (Chemistry), நிஜ வாழ்க்கையிலும் ஒரு அழகான காவியமாக மாறியுள்ளது.
ரசிகர்கள் நீண்ட நாட்களாக இவர்களது காதலைப் பற்றி கிசுகிசுத்து வந்தாலும், இருவரும் இது குறித்து மௌனம் காத்தே வந்தனர். ஆனால், கடந்த அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் சத்தமே இல்லாமல் நடந்து முடிந்தது. தற்போது அந்த ரகசியம் அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தங்களை ‘VIROSH’ என்று அன்போடு அழைத்து வந்த ரசிகர்களுக்கு, அவர்கள் பாணியிலேயே ஒரு நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்துள்ளனர்:
“நாங்கள் எந்தப் பிளான் செய்வதற்கு முன்பும்… நாங்கள் எங்களுக்காக எதைத் தேர்ந்தெடுப்பதற்கும் முன்பும் நீங்கள் எங்களுடன் இருந்திருக்கிறீர்கள். அதீத அன்புடன், நீங்கள் எங்களுக்கு ‘VIROSH’ என்கிற பெயரைத் தந்தீர்கள்… எங்களை அப்படி அழைத்தீர்கள். அதனால், இன்று, நிறைந்த மனதுடன், உங்கள் முன்னிலையில் நாங்கள் இணைகிறோம்.”
நீண்ட நாட்களாக நிலவி வந்த ஊகங்களுக்குப் பலன் கிடைக்கும் விதமாக, வரும் பிப்ரவரி 26-ம் தேதி இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது. எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்த இந்த ஜோடி, தற்போது தங்கள் வாழ்வின் புதிய பயணத்தைத் தொடங்கத் தயாராகிவிட்டது.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.