விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர்’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான பூவையார், தற்போது ஹீரோவாக நடித்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பூவையார். இந்த நிகழ்ச்சியில் அவர் காமெடியாக பேசியதும், தொகுப்பாளினி பிரியங்காவை கலாய்த்ததும், அதுமட்டுமின்றி கானா பாடல் மூலம் தனது திறமையை நிரூபித்ததும், அவர் புகழ் பெற காரணமாக இருந்தது.
இந்த புகழின் அடிப்படையில், அவருக்கு விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி, விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’, பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்திலும் அவர் நடித்திருந்தார்.
இந்த நிலையில், குழந்தை நட்சத்திரமாக நடித்த பூவையார் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியான நிலையில், இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தை ஜெயவேல் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும், ‘அன்னை வேளாங்கண்ணி ஸ்டூடியோ’ என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…