சூர்யா–ஜோதிகா நட்சத்திர தம்பதிகளின் மகள் தியா, மும்பையில் உள்ள சர்வதேச பள்ளியில் படிப்பை முடித்த விழாவில் கலந்து கொண்ட போது எடுத்த ஒரு புகைப்படத்தை, திடீரென ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யா–ஜோதிகாவின் மகள் தியா, பள்ளி படிப்பை முடித்த விழா குறித்த புகைப்படங்கள் ஜோதிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவானது. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கருத்துகள் பதிவான நிலையில், தியாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்தன.
இந்த நிலையில், ஒரு முக்கிய புகைப்படத்தை ஜோதிகா திடீரென டெலீட் செய்துள்ளார். அந்த புகைப்படம், சூர்யாவின் புகைப்படமாகும். அந்த புகைப்படத்தில், சூர்யாவின் வித்தியாசமான கெட்டப் இருந்தது தான் டெலிட் செய்ய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ‘சிங்கம்’ படத்தில் இருந்தது போன்று, மீசை மற்றும் தாடி இருந்ததால், சூர்யாவின் அடுத்த பட கெட்டப் லீக் ஆகிவிட கூடாது என்பதற்காக அவர் டெலீட் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சூர்யா தற்போது ஆர். ஜே. பாலாஜி இயக்கி வரும் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக அவர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி, ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகமும் விரைவில் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், ஜோதிகா அந்த புகைப்படத்தை எதனால் டெலீட் செய்தார் என்பது குறித்த உண்மையான தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…