16 ஆண்டுகள் திரைப்பயணம்: ‘யோகி’ பட நினைவலைகளில் நெகிழ்ந்த யோகி பாபு!

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத காமெடி சூப்பர் ஸ்டாராகவும், இன்றைய தலைமுறையின் பிஸியெஸ்ட் நடிகராகவும் வலம் வரும் யோகி பாபு, திரைத்துறைக்கு வந்து சரியாக 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு மனம் திறந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2009-ம் ஆண்டு அமீர் நடிப்பிலும், சுப்ரமணியம் சிவா இயக்கத்திலும் வெளியான ‘யோகி’ திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் 16 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்தப் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்ததன் மூலமே பெரும்பாலான ரசிகர்கள் முதல்முறையாக யோகி பாபுவை அறிந்தனர். அதிலிருந்து இன்று வரை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முகமாக உருவெடுத்துள்ளார்.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் யோகி பாபு பகிர்ந்த நெகிழ்ச்சிப் பதிவில்,

“அமீர் அண்ணன் நடிப்பில், சுப்ரமணியம் சிவா அண்ணன் அவர்கள் இயக்கத்தில் உருவான ‘யோகி’ திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆகின்றன. அமீர் அண்ணன் மற்றும் சுப்ரமணியம் சிவா அண்ணன் இருவருக்கும் என்றும் கடமைப்பட்டு உள்ளேன்.

நான் வெற்றிகரமாக இயங்கி வர முக்கியமான வேர்களான இயக்குநர்கள், எனது தயாரிப்பாளர்கள், திரைத்துறையில் அனைத்து பிரிவுகளிலும் பணி புரியும் நண்பர்கள், எனக்கு ஊக்கம் அளிக்கும் ஊடக நண்பர்கள், எனது மகிழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமான ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!”

என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

‘யோகி’ படத்துக்குப் பிறகு சின்னச் சின்ன ரோல்களில் தோன்றிய யோகி பாபு, படிப்படியாக அஜித், விஜய், ரஜினி, கமல், தனுஷ், சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் காமெடி கலந்து நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தற்போது கருப்பு, ஜெயிலர் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் ‘ஒரு வருஷத்துக்கு 30+ படங்கள்’ என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் ஒரே நடிகர் என்ற பெருமையும் யோகி பாபுவுக்கே சொந்தம். 16 ஆண்டுகளில் இருந்து இன்று வரை தொடர்ந்து வெற்றிப் பயணம் செய்யும் யோகி பாபுவுக்கு ரசிகர்களும் திரைத்துறையும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

anbuselvid8bbe9c60f

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

6 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

4 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago