தமிழ்நாட்டில் கன்னட படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என கொங்கு மக்கள் முன்னணி கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து இக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சி ஆறுமுகம் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்பட நடிகர்களில் மூத்த நடிகரான கமல்ஹாசன் அவர்கள் நடிப்பிலும், தயாரிப்பிலும் வெளியாக உள்ள ‘தக்லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பல்வேறு முறை தமிழ் திரைத்துறையினருக்கு எதிராக கன்னட அமைப்பினர் வன்மத்தோடு செயல்பட்டு வருகின்றனர். அதே போல தற்போது தமிழில் இருந்து பிரிந்த மொழி கன்னடம் என்று கமல்ஹாசன் அவர்கள் கூறிய வரலாற்று உண்மையை ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது மொழியின் வரலாற்றை அறியாமையாகும்.
ஆனால் அதே சமயம் அவர்களின் எதிர்ப்புக்கு பதிலடியாக தமிழகத்தில் கன்னட திரைப்பட முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்களை தமிழக திரையரங்கில் திரையிட அனுமதிக்க மாட்டோம்.
அதையும் மீறி தமிழர்களை அவமதிக்கும் கன்னட வெறியர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திரையிடும் திரையரங்குகளில் கொங்கு மக்கள் முன்னணி சார்பில் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…