விஜய்யின் 2 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ‘கில்லி’ போல் வசூலை குவிக்குமா?

தளபதி விஜய் நடித்த ‘கில்லி’, ’சச்சின்’ உள்பட ஒரு சில படங்கள் ஏற்கனவே ரீரிலீஸ் செய்யப்பட்டு, நல்ல வசூலை குவித்த நிலையில், தற்போது மேலும் இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ்  செய்ய   இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

பழைய படங்களை கடந்த சில ஆண்டுகளாகவே ரீரிலீஸ் செய்து, மாபெரும் வசூலை பெற்று வரும் நிலையில், தற்போது அடுத்த கட்டமாக விஜய் நடித்த ’குஷி’ மற்றும் ’சிவகாசி’ படங்கள் ரீரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், விஜய்–ஜோதிகா நடித்த ’குஷி’ திரைப்படம் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல், 2005ஆம் ஆண்டு வெளியான, விஜய்–அசின் நடிப்பில், பேரரசு இயக்கத்தில் உருவான ’சிவகாசி’ படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்த இரண்டு படங்களையும் ஏ. எம். ரத்னம் தயாரித்திருந்த நிலையில் தற்போது அவர் இந்த 2 படங்களையும் ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் இந்த இரண்டு படங்களின் ரீரிலீஸ் தேதிகள் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’கில்லி’ படத்தை ரீரிலீஸ் செய்தவர் ஏ. எம். ரத்னம் என்ற நிலையில், அதே போன்ற வசூலை இந்த படங்களும் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

1 மாதம் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

1 மாதம் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago