திரைப்பட செய்திகள்

துபாயில் சிக்கிய நடிகர் அஜித்: பாதுகாப்பு குறித்து மேலாளர் முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ நடவடிக்கைகள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உள்ளிட்ட நாடுகளின் வான்வெளி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திரைத்துரை மட்டுமின்றி கார் பந்தயத்திலும் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் அஜித்குமார், தற்போது “அஜித் குமார் ரேஸிங்” (Ajith Kumar Racing) அணியின் சார்பாக சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக கடந்த சில வாரங்களாகவே அவர் துபாயில் தங்கியிருந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று (மார்ச் 1, 2026) தனது பயிற்சிகளை முடித்துவிட்டு அஜித் சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றபோது, போர் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக பல விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் அவர் சென்னை திரும்ப முடியாமல் துபாயிலேயே தங்கும் சூழல் உருவானது.

அஜித்தின் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கவலை தெரிவித்து வந்த நிலையில், அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

“அஜித்குமார் நேற்று சென்னை கிளம்ப வேண்டியது, ஆனால் விமான ரத்து காரணமாக அவர் விமான நிலையத்திலிருந்து மீண்டும் தனது இருப்பிடத்திற்கே திரும்பினார். அவர் தற்போது துபாயில் மிகவும் பாதுகாப்பாக உள்ளார். ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை.”

தற்போது துபாய் மற்றும் அபுதாபி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் வாழ்க்கை இயல்பாகவே உள்ளது. இருப்பினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக வான்வெளி மூடப்பட்டுள்ளதால், நிலைமை சீரான பிறகு அஜித் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Natarajan Karuppiah

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

4 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

3 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago