நடிகை கெளரி கிஷன் அதிரடி பதில்: “இந்த வெற்று மன்னிப்பையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது!” – யூடியூபர் வருத்தத்தை நிராகரிப்பு!

தமிழ் சினிமாவின் அழகிய நடிகை கெளரி கிஷன், ’96’ படம் மூலம் அறிமுகமாகி ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ உள்ளிட்ட படங்களிலும், மலையாள படங்களிலும் ஜொலித்து வருபவர். தற்போது ‘Others’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ள அவர், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்ந்து பேசுபொருளாகியுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் ஹீரோவிடம் “கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?” என யூடியூபர் ஆர்.எஸ். கார்த்தி கேட்ட கேள்வி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு கோபமடைந்த கெளரி, “என்னோட எடை பற்றி தனிப்பட்ட கேள்வி கேட்பது தவறு. ஆண் நடிகர்களிடம் இப்படி கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்? இதை நார்மலைஸ் செய்ய முயல்கிறார்கள்!” என காட்டமாக பதிலடி கொடுத்தார்.

இதனால் தமிழ், மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும் கெளரிக்கு ஆதரவு தெரிவித்தனர். யூடியூபரை கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து ஆர்.எஸ். கார்த்தி வீடியோ வெளியிட்டு, “ஜாலியாக கேட்ட கேள்வி தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. மனம் புண்படுத்தியிருந்தால் வருத்தம்!” என கூறினார். ஆனால், தவறை ஒப்புக்கொள்ளாமல் “தவறாக புரிந்துகொள்ளப்பட்டது” என கூறியது மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு பதிலடி கொடுத்த நடிகை கெளரி கிஷன், “தவறை உணராமல் ‘ஜாலியாக கேட்ட கேள்வி தவறாக புரிந்துகொள்ளப்பட்டது’ என மீண்டும் பொறுப்பில்லாமல் பேசியிருக்கிறார். கேட்ட கேள்வி தவறுதான் என ஒத்துக்கொண்டு தெளிவாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறை மறைத்து ‘தவறாக புரிந்துகொள்ளப்பட்டது’ என வருத்தம் தெரிவிப்பதால் பயனில்லை. தவறை உணர்வதுதான் முக்கியம். இதுபோன்ற வெற்று வருத்தங்களையும், வெற்று வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்!” என தெளிவாகவும், காட்டமாகவும் பதிவிட்டுள்ளார்.

கெளரியின் இந்த துணிச்சலான பதில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. உடல் அவமானம் (Body Shaming) குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கெளரி, இந்த சர்ச்சையின் மூலம் மேலும் பலருக்கு உத்வேகமாகியுள்ளார்.

anbuselvid8bbe9c60f

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

1 வாரம் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

4 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago