Download App

“என் நிலைபாட்டில் உறுதியாக நின்றேன்” – கௌரி கிஷனுக்கு திரைத்துறை முழு ஆதரவு!

கார்த்திகை 8, 2025 Published by anbuselvid8bbe9c60f

GouriKishan

நடிகை கௌரி கிஷன் நடித்த அதர்ஸ் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் எழுந்த உடல் எடை தொடர்பான கேள்வி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு தக்க பதிலடி கொடுத்த கௌரி கிஷன் தற்போது விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“விமர்சனம் ஒரு பகுதி. ஆனால், ஒருவரின் உடல் அல்லது தோற்றத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிவைக்கும் கேள்விகள் எந்தச் சூழலிலும் தவறானவை” என தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

GouriKishan 1

செய்தியாளர் சந்திப்பில் ஒரு யூடியூபர், படத்தின் ஹீரோவிடம் கௌரியின் உடல் எடை குறித்து கேள்வி எழுப்பியதே சர்ச்சைக்கு காரணம். அதற்கு கௌரி உடனடியாக, “இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங். நீங்க எப்படி இதைக் கேட்கலாம்?” என கண்டித்துப் பேசினார்.

GouriKishan 2

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியதாவது:

“நான் நடித்த படத்தைப் பற்றிய கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டும். அதே ஆக்ரோஷமான தொனியில் ஒரு ஆண் நடிகரிடம் இதே கேள்வியைக் கேட்பார்களா? இது எனக்கு மட்டுமல்ல, இதே அனுபவத்தை எதிர்கொண்ட அனைவருக்கும் முக்கியமானது.”

GouriKishan 3

திரைத்துறையினரும், சென்னை பிரஸ் கிளப், அம்மா சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் கௌரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

நமது அசௌகரியத்தை வெளிப்படுத்த அனுமதி உண்டு. தவறு நடந்தால் கேள்வி கேட்க அனுமதி உண்டு” என முடித்துள்ள அவரது அறிக்கை, பாடி ஷேமிங் குறித்து முக்கிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.