பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 வாரங்களை கடந்த இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் களமிறங்கினர். இதுவரை 7 பேர் வெளியேறிய நிலையில், இந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூவும் எலிமினேட் ஆகியுள்ளனர். அரோரா, ரம்யா, கெமி போன்றவர்களை விட்டுவிட்டு, நன்றாக விளையாடிய பிரவீனை வெளியேற்றியது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 10) வெளியான புரொமோவில் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க் ஒன்றில் பார்வதி மற்றும் சபரி இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. சபரி, பார்வதியை தள்ளிவிட, அவர் கீழே விழுந்து விடுகிறார். இதைக் கண்ட ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். இந்த சம்பவம் புரொமோவில் ஹைலைட்டாக இடம்பெற்றுள்ளது.
முதல் புரொமோவில் இந்த டாஸ்க் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், இரண்டாவது புரொமோவிலும் இதே டாஸ்க் தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது. பார்வதி – சபரி மோதல் எப்படி முடியும்? யாருக்கு பிக் பாஸ் தண்டனை கொடுப்பார்? என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.