பிக் பாஸ் தமிழ் சீசன் 9: இறுதிக்கட்டத்தில் பரபரப்பு – அமித் & துஷார் மீண்டும் வீட்டிற்கு வந்து அரோராவை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்!
தை 12, 2026 Published by anbuselvid8bbe9c60f

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 98 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் பைனல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வீட்டில் அரோரா, விக்ரம், சபரி, திவ்யா ஆகியோர் மட்டுமே போட்டியில் உள்ளனர்.
கடந்த வாரம் நடைபெற்ற பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை வென்று தனது வலிமையை நிரூபித்திருந்தார். அதேசமயம் சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருந்தார்.
இந்நிலையில், வெளியேறிய போட்டியாளர்கள் பலர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பி வரும் திருப்பம் நிகழ்ந்துள்ளது. இன்று வெளியான புதிய புரோமோவில் மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமித் மற்றும் துஷார் இருவரும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
புரோமோவில் நடந்த முக்கிய உரையாடல்:
புரோமோவில் அரோரா பேசுகையில் “18 லட்சத்தை விட இந்த தருணத்துக்காகத்தான் காத்திட்டு இருந்தேன். அரோராவை அழுக வைக்கணும்னா எல்லாரும் ஈசியா துஷார் பேரைத்தான் சொல்லிட்டு இருந்தாங்க” என்று கூறினார்.
இதற்கு பதிலடியாக துஷார் அரோராவிடம் ஆறுதலாக பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது: “நான் போனதுக்கு காரணம் நீ இல்ல. உன்னோட உழைப்பால தான் இவ்வளவு தூரம் வந்துருக்க… யாரோட பேரை வச்சும் நீ முன்னாடி வரல. நல்லா பண்ணிட்டு இருக்க. பார்க்க நல்லா இருக்கு.”
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு

இந்த புரோமோ வெளியான உடனேயே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- அமித் – அரோரா இடையே ஏற்கனவே இருந்த மோதல் மீண்டும் வெடிக்குமா?
- துஷார் அரோராவுக்கு ஆதரவாக பேசியது அவர்களுக்கு இடையே புரிதல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
- இறுதிக்கட்டத்தில் இந்த திருப்பங்கள் யாருக்கு ஆதரவாக அமையும் என்பதும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இனி நடக்கவுள்ள நிகழ்வுகள் மற்றும் இறுதி வெற்றியாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

















