Download App

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

புரட்டாதி 8, 2026 Published by premkumar6c8c7c1bc8

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது சீசனை ஸ்டார் விஜய்யும் ஜியோஹாட்ஸ்டாரும் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. இந்திய ரியாலிட்டி தொலைக்காட்சி வரலாற்றிலேயே புதிய சாதனை படைக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட தொடக்க விழா அமைந்தது.


பிக் பாஸ் சீசன் 10-ன் தொடக்க நிகழ்ச்சியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 29 போட்டியாளர்கள் இல்லத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் நேரலை மேடையில் தங்களைப் பற்றிய அறிமுகத்தை ரசிகர்கள் முன் வழங்கினர். முற்றிலும் புதிய முயற்சியாக, போட்டியாளர்களின் அறிமுகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, நேரலையில் பங்கேற்ற பார்வையாளர்கள் அவர்களின் தொடர் பயணத்தைத் தீர்மானித்தனர். இதன் விளைவாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.


பொதுமக்களின் வாக்குகள் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் தங்கள் இடத்தை உறுதி செய்த 19 போட்டியாளர்கள்: அன்சார், முகேஷ், தான்யா, ராகவ், குமரன், சந்தினி, சவின்யா, வினோத், பாண்டியன், அவினாஷ், முத்தழகி, அஸ்வினி, பிரித்விநாத், ஜாவேத், லட்சுமி பிரியா மற்றும் ஷாதிகா. இவர்களுடன், ‘பிக் பாஸ்: தி காமன் மேன்’ என்ற மாநில அளவிலான போட்டியின் மூலம் தேர்வான ஜேசன், முனியம்மா மற்றும் ஷாமா ஆகிய மூன்று சாமானிய மக்களும் இணைகின்றனர். பிக் பாஸ் முதன்மை வீட்டில் பிரபலங்களுடன் சாமானிய மக்கள் இணைந்து போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

தொடக்க நாளிலேயே எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களுள் சாமானிய மக்களான ஆஷா, மணிகண்டன், சோபா, மணிவண்ணன் மற்றும் டார்வின் ஆகியோருடன் ஷப்னம், பிரசாந்த் ரிவியூவர், கவிதா, அக்ஷிதா, ராகவ், மாளவிகா, புவியரசன், எபி மற்றும் ரகு ஆகியோரும் அடங்குவர்.


பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை தினமும் இரவு 9.30 மணிக்கு ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் கண்டு மகிழலாம். மேலும், ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாகக் காணலாம்.


ஜியோஹாட்ஸ்டார் பற்றி:
50 கோடிக்கும் அதிகமான மாதச் சராசரி பயனர்களையும், 3,00,000 மணிநேரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ள ஜியோஹாட்ஸ்டார், உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும். திரைப்படங்கள், ஒரிஜினல் தொடர்கள், நேரலை விளையாட்டுப் போட்டிகள், நேரலை நிகழ்வுகள், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகள் உட்பட ஜியோஸ்டார் நெட்வொர்க்கின் 100-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் 19 மொழிகளில் இதில் கிடைக்கின்றன. ஜியோஹாட்ஸ்டார் சேவையை ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் (iOS) மற்றும் https://www.hotstar.com/in இணையதளம் வாயிலாகப் பயனர்கள் பெறலாம்.

Trending Now

No trending articles in this category from the last 3 days.