திரைப்பட செய்திகள்

ஜூலை 10-ல் திரைக்கு வரும் ‘இதயம் முரளி’: அதர்வா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாய் மற்றும் ஆக்ஷன் ஹீரோ என தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கி பயணித்து வரும் நடிகர் அதர்வா முரளி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘இதயம் முரளி’. தற்போது இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

நெஞ்சம் நனைய வைக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் வரும் ஜூலை 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) தனது சமூக வலைதளப் பக்கத்தில், “காதலின் வழியிலான ஒரு பயணம் இந்த ஜூலை முதல் திரையரங்குகளில் தொடங்குகிறது. ஜூலை 10 முதல் இதயம் முரளி பெரிய திரைகளில்…” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னாள் முன்னணி நடிகர் முரளியின் எவர்கிரீன் ஹிட் படமான ‘இதயம்’ தலைப்பை நினைவுபடுத்தும் வகையில் இந்த படத்தின் தலைப்பு அமைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

இயக்கம்: ஆகாஷ் பாஸ்கரன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், காயடு லோஹர், நிஹாரிகா என்.எம், நட்டி (நடராஜன் சுப்ரமணியம்) மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் இசையமைப்பாளராக வலம் வரும் எஸ். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தமன் இசையில் ஏற்கனவே வெளியான ‘வாண் வாண்’, ‘தங்கமே தங்கமே’ மற்றும் ‘இதயா’ ஆகிய பாடல்கள் இணையத்தில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளன. பாடல்களின் மெலடி ஹிட், படத்திற்கான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அதர்வா ஒரு முழுநீள காதல் காவியத்தில் நடித்துள்ளதால், இந்த ஜூலை 10 திரையரங்குகளில் காதலர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் ஒரு சிறந்த கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!

Natarajan Karuppiah

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

3 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

3 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago