திரைப்பட செய்திகள்

அமேசான் பிரைமில் ‘லீடர்’: ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‛லெஜெண்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தொழிலதிபர் ‘லெஜண்ட்’ சரவணன். ஜே.டி.-ஜெர்ரி இயக்கத்தில் உருவான அந்தப் படத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த திரைப்படம் ‛லீடர்’.

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான ‛லீடர்’ திரைப்படம், இந்த ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் லெஜண்ட் சரவணனுடன் இணைந்து ஷ்யாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் அதிரடிப் படமாக உருவான இந்தத் திரைப்படத்தில், லெஜண்ட் சரவணன் ஒரு பக்கா ஆக்ஷன் ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தியிருந்தார். ரசிகர்களிடையே இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, இப்படம் மே 1-ஆம் தேதியே ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று முன்னதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், சில காரணங்களால் அதன் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போனது.தற்போது ரசிகர்களின் காத்திருப்புக்கு விடை கிடைக்கும் வகையில், ‛லீடர்’ திரைப்படம் வருகிற மே 29-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அமேசான் பிரைம் தளத்தில் இப்படம் ஒரே நேரத்தில் பல மொழி ரசிகர்களையும் சென்றடைய உள்ளது.

தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ‘லீடர்’ திரைப்படம் மே 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் மற்றும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இந்த வார இறுதியில் ஓடிடியில் இப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்.

Natarajan Karuppiah

Recent Posts

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

1 மாதம் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

1 மாதம் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

1 மாதம் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

2 மாதங்கள் ago

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சுபாஷ் என்ற பெயரில் பிரம்மாண்டமான திரைப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்தயாரிக்கிறது

இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…

2 மாதங்கள் ago

என் தாய் தந்தைக்குக்கூட இவ்வளவு கடமைப்பட்டதில்லை! – மிஷ்கின்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…

2 மாதங்கள் ago