உலகநாயகன் கமல்ஹாசன், ‘தக்லைஃப்’ படத்தின் புரமோஷன் விழாவின் போது, “தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்” என்று கூறியதற்கு, கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், ‘தக்லைஃப்’ திரைப்படத்தை கர்நாடக மாநிலத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும், கன்னட அமைப்பினர் கூறி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா உட்பட, பல அரசியல் கட்சி தலைவர்கள் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, “இது ஜனநாயக நாடு. சட்டத்தையும் நீதியையும் நான் நம்புகிறேன். அன்பு தான் முதன்மை என்றும் நான் நம்புகிறேன்.
கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்களின் மீது எனக்கு மிகுந்த அன்பு உள்ளது. நான் மன்னிப்பு கேட்பேன். எப்போது என்றால், நான் தவறு செய்திருந்தால். தவறே செய்யவில்லை என்றால், மன்னிப்பு கேட்க மாட்டேன். இதுதான் எனது வாழ்க்கை முறை,” என்று கூறினார்.
இதையடுத்து, அவர் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…