Download App

மன்னிப்பு கண்டிப்பாக கேட்பேன்.. ஆனால்… கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல்ஹாசன்..!

வைகாசி 30, 2025 Published by Natarajan Karuppiah

உலகநாயகன் கமல்ஹாசன், ‘தக்லைஃப்’ படத்தின் புரமோஷன் விழாவின் போது, “தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்” என்று கூறியதற்கு, கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், ‘தக்லைஃப்’ திரைப்படத்தை கர்நாடக மாநிலத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும், கன்னட அமைப்பினர் கூறி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா உட்பட, பல அரசியல் கட்சி தலைவர்கள் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, “இது ஜனநாயக நாடு. சட்டத்தையும் நீதியையும் நான் நம்புகிறேன். அன்பு தான் முதன்மை என்றும் நான் நம்புகிறேன்.

கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்களின் மீது எனக்கு மிகுந்த அன்பு உள்ளது. நான் மன்னிப்பு கேட்பேன். எப்போது என்றால்,  நான் தவறு செய்திருந்தால். தவறே செய்யவில்லை என்றால், மன்னிப்பு கேட்க மாட்டேன். இதுதான் எனது வாழ்க்கை முறை,” என்று கூறினார்.

இதையடுத்து, அவர் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.