பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இப்போது 6 வாரங்களைத் தாண்டி ஏழாவது வாரத்தில் தீயாய் எரிந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இதுவரை 8 பேர் வெளியேறி விட்ட நிலையில், தற்போது வீட்டில் 12 பேர் மட்டுமே மீதமிருக்கின்றனர்.
கடந்த வாரம் கனி திருவுக்கும் திவாகருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. “இருவரில் ஒருவர் நிச்சயம் வெளியேறுவார்” என்று ரசிகர்கள் வரை பேசிக்கொண்ட நிலையில், இறுதியில் திவாகர் எலிமினேட் ஆனார். அந்த வெளியேற்றத்துக்குப் பின்னர் கனி மீது “திவாகரை காப்பாற்றவில்லை” என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த வாரம் நாமினேஷனில் அதிர்ச்சிகரமாக 13 பேர் இடம் பிடித்துள்ளனர். இதனால் யாரு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
இந்த வார டாஸ்க் “சோறு, சோப்பு, மாப்பு” என்ற பெயரில் நடந்து வருகிறது. போட்டியாளர்கள் மூன்று அணிகளாகப் பிரிந்து சமையல், சுத்தம், துணி துவைத்தல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்து போட்டியிடுகின்றனர்.
இன்று வெளியான முதல் புரொமோவில் கிட்சன் டீமில் இருக்கும் கனி திரு முழு கோபத்தில் வெடித்திருக்கிறார்!
“டாஸ்க்கில கேட்டா பண்ணி தரணும்… அதுதான் கேம்!” என்று கத்திய கனி, பார்வதி, சாண்ட்ராவை நோக்கி “தான் ரொம்ப நியாயமான சமையல்காரவுங்கனு காமிச்சுக்குறாங்க” என்று கடுமையாக சாடினார்.
உச்சக்கட்ட கோபத்தில் “என்னோட கேம் கேவலமான கேமா…? ஓகே… நான் இனி இந்த கிட்சன் டீமில இல்ல!” என்று சத்தமாக அறிவித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார் கனி.
இந்த ஒரு கிளிப் போதும் – சமூக வலைதளங்கள் முழுவதும் #KaniThiru #BiggBossTamil9 ட்ரெண்டிங்கில் உள்ளது. “கனி இப்படி வெடிப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை”, “இது ரியல் கோபமா இல்லை ஸ்ட்ராட்டஜியா?” என்று ரசிகர்கள் பிரிந்து விவாதித்து வருகின்றனர்.
இந்த டாஸ்க் முடிவுகள் நாமினேஷனையும் எலிமினேஷனையும் எப்படி பாதிக்கப் போகிறது? கனியின் இந்த “டீம் விட்டு வெளியேறுதல்” அவருக்கு பிளஸ் ஆகுமா மைனஸ் ஆகுமா?
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…