அவன் என்னை  தலையணை, விளையாடும் பொம்மை என நினைக்கிறான்.. கீர்த்தி சுரேஷின் வைரல் வீடியோ..!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “அவன் என்னை தலையணை, விளையாடும் பொம்மை மற்றும் பாலம் என்று நினைக்கிறான்” என்று கேப்ஷன் ஆக பதிவு செய்திருப்பதை அடுத்து, இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘மகாநதி’ உள்பட சில படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அவர் ரிவால்வர், ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தனது 15 ஆண்டுகால காதலர் அந்தோணி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது திருமணத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் 18 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள நிலையில் அதில்  அவ்வப்போது அவர் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் தன் நாய்க்குட்டியுடன் படுக்கையில் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு கேப்ஷன் ஆக “அவன் என்னை தலையணை, விளையாடும் பொம்மை, பிரிட்ஜ் மற்றும் வேற என்னவெல்லாம் நினைக்கிறான்?” என்று பதிவு செய்துள்ள நிலையில், இந்த வீடியோ க்யூடாக இருப்பதாக கூறி நான்கு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

1 மாதம் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

1 மாதம் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago