தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படத்தின் மீது ரசிகர்கள் அளப்பரிய எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர். எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, தளபதி கச்சேரி பாடல் யூடியூபில் 85 மில்லியனுக்கும் மேல் பார்வைகளைப் பெற்று உலகளவில் பிரபலமடைந்துள்ளது. சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் இப்பாடலுக்கு நடனமாடியது ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு, ரசிகர்கள் பலரும் விஜய்யின் நடன அசைவுகளைப் போலவே ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜு வர்கீஸ் (Aju Varghese), ‘தளபதி கச்சேரி’ பாடலுக்கு விஜய் போலவே நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜு வர்கீஸின் இந்த நடனம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அஜு வர்கீஸ் தனது X (ட்விட்டர்) பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, “Will miss your movies sir! #thalapathy @actorvijay” என்று குறிப்பிட்டுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பாபி டியோல் வில்லனாக நடித்துள்ள இப்படம், அரசியல் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், ரசிகர்கள் திரையரங்க கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகியுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும்…
தமிழ்நாடு சமூக நீதியிலும், விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கும் திட்டங்களிலும் எப்போதும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அந்த…
தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை…
திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன்,…
சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது அது பார்வையாளர்களை முழுமையாக…
தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது.