தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுத் திட்டமான மருதநாயகம் படம் குறித்து மீண்டும் பேச்சு எழுந்துள்ளது. 56-வது சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI 2025) கலந்துகொள்ள கோவா சென்றிருக்கும் கமல்ஹாசனிடம் நிருபர்கள் “மருதநாயகம் எப்போது?” என்று கேட்டனர்.
அதற்கு புன்னகையுடன் பதிலளித்த கமல், “இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்க்கும்போது, மருதநாயகம் படத்தை எடுப்பது இப்போது முழுமையாக சாத்தியமாகியிருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.
18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் காலத்தில் வாழ்ந்த முகமதிய மன்னர் யூசுப் கான் alias மருதநாயகத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்த மாபெரும் வரலாற்றுத் திரைப்படத்தை கமல்ஹாசனே இயக்கி நடிக்கத் திட்டமிட்டிருந்தார். 1999-இல் பிரம்மாண்டமான தொடக்க விழா நடத்தப்பட்டது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கூட வாழ்த்து செய்தி அனுப்பி, அந்த விழாவில் பங்கேற்றது அப்போது உலகளாவிய செய்தியாக மாறியது.
ஆனால் அன்றைய தொழில்நுட்ப வசதிகளும், பிரம்மாண்ட பட்ஜெட் காரணமாகவும் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இருப்பினும் கமல்ஹாசன் ஒருபோதும் இந்தக் கனவை கைவிட்டதில்லை. இப்போது AI, VFX, CGI போன்ற அதி நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், மருதநாயகத்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் ரசிகர்கள் இந்தச் செய்தியைக் கேட்டு உற்சாகமடைந்துள்ளனர். “இந்த முறை உண்மையாகவே மருதநாயகம் வருமா?” என்ற எதிர்பார்ப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகநாயகனின் கனவுப் படம் விரைவில் நிறைவேறுமா? ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்!
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.