கமல்ஹாசனுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து.. என்ன காரணம்?

பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தனது சமூக வலைதள பக்கம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆஸ்கார் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து பல திரை உலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பத்மபூஷன் திரு. கமல்ஹாசன் அவர்கள், மதிப்புமிக்க தி அகாடமி விருதுகள் 2025 குழுமத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்திய திரையுலகிற்கு பெரும் பெருமைக்குரிய தருணம்.

60 ஆண்டுகளாக அற்புதமான நடிப்பு பயணத்தை கொண்ட கமல்ஹாசன், ஒரு நடிகரை தாண்டியவர். ஒரு நடிகர், கதை சொல்பவர் மற்றும் இயக்குனராக அவரது கலைத் திறமை, பல்துறைத் திறமை மற்றும் பல ஆண்டு கால அனுபவம் ஆகியவை இந்திய மற்றும் உலகத் திரைப்படத் துறையில் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஒரு எழுத்தாளர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என திரைப்பட தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் அவரது அசாதாரண ஆதிக்கம் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. அவர் ஒரு உண்மையான கலைஞர்.

அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலக திரைப்பட துறைக்கு மேலும் பல ஆண்டுகள் சேவையாற்ற வாழ்த்துகிறேன்.

Natarajan Karuppiah

Recent Posts

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

1 மாதம் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

1 மாதம் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

1 மாதம் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

2 மாதங்கள் ago

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சுபாஷ் என்ற பெயரில் பிரம்மாண்டமான திரைப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்தயாரிக்கிறது

இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…

2 மாதங்கள் ago

என் தாய் தந்தைக்குக்கூட இவ்வளவு கடமைப்பட்டதில்லை! – மிஷ்கின்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…

2 மாதங்கள் ago