Download App

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

ஆனி 17, 2026 Published by Natarajan Karuppiah

தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன், தற்போது தனது இரண்டாவது திரைப்படமான ‘லீடர்’ (Leader) மூலம் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார்.

திரையரங்குகளைத் தொடர்ந்து அமேசான் பிரைம் வீடியோவில் (@PrimeVideoIN) வெளியான இத்திரைப்படம், டிஜிட்டல் ரசிகர்களிடையே மிகக் குறுகிய காலத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று வருகிறது.

கடந்த மே 29 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘லீடர்’ திரைப்படம் வெளியானது. வெளியான இரண்டே வாரங்களுக்குள் (14 நாட்கள்) 75 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து இத்திரைப்படம் ஒரு புதிய மைல்கல் சாதனையை எட்டியுள்ளது.

ஒரு கார் மெக்கானிக்காக தூத்துக்குடியில் வாழும் அண்டர்கவர் ஏஜென்ட், துறைமுகத்தை அழிக்க நினைக்கும் சதியை எப்படி முறியடிக்கிறார் என்ற விறுவிறுப்பான ஸ்பை-ஆக்ஷன் கதைகளத்தைக் கொண்டுள்ள இப்படம் ஓடிடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ஜிப்ரானின் இசை: படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஆக்ஷன் காட்சிகளுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் ‘லீடர்’ திரைப்படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்கள் தொடர்ந்து குவிந்து வருவதால், வரும் வாரங்களில் இதன் வியூவர்ஷிப் (Streaming Minutes) இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளைத் தாண்டி ஓடிடி தளங்களில் லெஜண்ட் சரவணனின் படங்களுக்கு இருக்கும் அசுர வேக வரவேற்பை இந்த 75 மில்லியன் நிமிட சாதனை மீண்டும் நிரூபித்துள்ளது.

More News