விவாகரத்து பெற்றவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்ற நடிகை.. போலீசில் புகார்..!

பிரபல நடிகையும், மேக்கப் ஆர்டிஸ்ட்டுமான அஸ்மிதா, தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா, கடந்த 2017 ஆம் ஆண்டு விஷ்ணுகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், திடீரெனக் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஆனால், சில மாதங்களிலேயே மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த நிலையில், அஸ்மிதாவுக்கு மூன்றாவது குழந்தை சமீபத்தில் பிறந்தது.

இந்தச் சூழலில், அஸ்மிதா மற்றும் விஷ்ணுகுமார் இடையே மீண்டும் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின. இருவரும் மாறி மாறி ஊடகங்கள் மூலம் புகார்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தனது கணவர் விஷ்ணுகுமார் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்துவதாக அஸ்மிதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விஷ்ணுகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Natarajan Karuppiah

Share
Published by
Natarajan Karuppiah

Recent Posts

“எல்லாமே கருப்ப சாமி பார்த்துகிட்டார்!” – ‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக் விழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் 'கருப்பு'.

1 நாள் ago

“பரிமளா & கோ” பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி…

2 நாட்கள் ago

அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘கான் சிட்டி’…

3 நாட்கள் ago

தீபாவளி வெளியீட்டிற்கு தயாராகும் சிலம்பரசனின் ‘அரசன்’

தமிழ் சினிமாவின் 'மேன்மகன்' சிலம்பரசன் TR (STR) நடிப்பில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் 'அரசன்'.

4 நாட்கள் ago

விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவரது தம்பி அறிமுகமாகும் ‘Yellow Yellow Dirty Fellow’: கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த விஷ்ணு விஷால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஷ்ணு விஷால்…

5 நாட்கள் ago

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு சினிமா: ரஹ்மான் ஓப்பன் டாக்

தமிழ், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக இருந்தாலும், தெலுங்கு சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடிப் படங்களை ஒப்புக்கொண்டு நீண்ட காலமாகிவிட்டது.

5 நாட்கள் ago