‘என் நெஞ்சில் குடியிருக்கும்’.. விஜய்யின் கம்பீர குரலுடன் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

தனது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடி வரும் நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு, அவரது நடிப்பில் உருவாகி வரும் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியான இந்த மிரட்டலான வீடியோ, “என் நெஞ்சில் குடியிருக்கும்” என்ற விஜய்யின் கம்பீரமான குரலுடன் தொடங்குகிறது. ஒரு போராட்ட களத்தில், கையில் வாளுடன் போலீஸ் உடையில் விஜய் நடந்து வரும் காட்சி, அத்துடன் அவரது முறுக்கு மீசை கெட்டப் ஆகியன ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் விருந்தாக அமைந்துள்ளன.

இந்தக் காணொளியின் தொடக்கத்தில், “உண்மையான தலைவர் மக்களுக்காக மட்டுமே எழுகிறார், அதிகாரத்திற்காக அல்ல”என்ற ஆங்கில வாசகம் இடம் பெற்றுள்ளது. சுற்றிலும் நெருப்பு எரிந்து கொண்டிருக்க, விஜய் அதற்கிடையே மாஸாக நடந்து வரும் காட்சியும் வீடியோவில் உள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோவை காணும்போது, விஜய் இந்தப் படத்தில் ஒரு ஆக்ரோஷமான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தில், மமிதா பாஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, நரேன் உட்படப் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை எச். வினோத் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Natarajan Karuppiah

Share
Published by
Natarajan Karuppiah

Recent Posts

“எல்லாமே கருப்ப சாமி பார்த்துகிட்டார்!” – ‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக் விழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் 'கருப்பு'.

1 நாள் ago

“பரிமளா & கோ” பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி…

2 நாட்கள் ago

அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘கான் சிட்டி’…

3 நாட்கள் ago

தீபாவளி வெளியீட்டிற்கு தயாராகும் சிலம்பரசனின் ‘அரசன்’

தமிழ் சினிமாவின் 'மேன்மகன்' சிலம்பரசன் TR (STR) நடிப்பில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் 'அரசன்'.

4 நாட்கள் ago

விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவரது தம்பி அறிமுகமாகும் ‘Yellow Yellow Dirty Fellow’: கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த விஷ்ணு விஷால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஷ்ணு விஷால்…

5 நாட்கள் ago

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு சினிமா: ரஹ்மான் ஓப்பன் டாக்

தமிழ், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக இருந்தாலும், தெலுங்கு சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடிப் படங்களை ஒப்புக்கொண்டு நீண்ட காலமாகிவிட்டது.

5 நாட்கள் ago