திரைப்பட செய்திகள்

SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக் வெளியீடு! இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!

மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” (Under 18) படத்தின் டைட்டில் லுக், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக “அண்டர் 18” (Under 18) உருவாகி வருகிறது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார்.

குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக “அண்டர் 18” (Under 18) படத்தின் கதை சொல்லவுள்ளது.

இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறார். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணையவுள்ளனர்.

“Under 18” படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.

Natarajan Karuppiah

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

1 வாரம் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

4 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago