திரைப்பட செய்திகள்

அதிரடி ஆக்ஷன் நிறைந்த : ‘டாக்ஸிக்’ டீசர் – ராக்கிங் ஸ்டார் யாஷின் அதிரடி மாற்றத்துடன் பிரம்மாண்ட சினிமா உலகம்

2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’. கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேட்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்தநாளில் வெளியான அதிரடி “ராயா அறிமுகம்” வீடியோவும், நயன்தாராவின் கங்கா, கியாரா அத்வானியின் நாடியா, ஹூமா குரேஷியின் எலிசபெத், ருக்மிணி வசந்தின் மெலிசா, தாரா சுதாரியாவின் ரெபெக்கா என வெளியாகிய ஸ்டைலான கேரக்டர் போஸ்டர்களும் ரசிகர்களை பரவசப்படுத்தின. இப்போது அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, அந்த எதிர்பார்ப்பை துல்லியமாக பூர்த்தி செய்திருக்கிறது.

டாக்ஸிக் டீசர், வண்ணமயமான அதே நேரத்தில் ரத்தம் தெறிக்கும் ஒரு மிகப் பெரிய சினிமா உலகத்தை வெளிப்படுத்துகிறது. சர்க்கஸ் பின்னணியிலிருந்து கிழக்கு ஆசிய பின்னணிக்கு நகரும் இந்தக் கதை, இருண்ட, பரபரப்பான சூழலுடன் வெவ்வேறு காலகட்டங்களை உள்ளடக்கியது. அதிரடி காட்சிகளுக்கு அப்பால், கதையமைப்பு மற்றும் நடிகர்களின் ஆழமான நடிப்பே இந்த உலகத்தின் இதயத் துடிப்பாக இருப்பதையும் டீசர் சுட்டிக்காட்டுகிறது.

இந்த புயலின் மையத்தில் பிரமாண்டமாக நிற்கிறார் ராக்கிங் ஸ்டார் யாஷ். அவரது இந்த மாற்றம் முழுமையான புதிய அவதாரம் என்றே சொல்லலாம். ஒல்லியான, பரவசமான தோற்றத்திலிருந்து, போர்க்களத்தில் உருவான வலிமையான உடலமைப்பு வரை, அவரின் ஒவ்வொரு லுக்கும் அவரது கடுமையான பயிற்சியையும், கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

ஆனால் இது வெறும் உடல் மாற்றம் மட்டுமல்ல. ஒவ்வொரு தோற்றத்திலும் யாஷ் காட்டும் உடல் மொழியும் நுணுக்கமான நடிப்புத் திறனும், அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தை முன்வைக்கின்றன. இதுவரை டாக்ஸிக் பயணத்தில் காணாத ஒரு தைரியமான புதிய அத்தியாயத்தை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது.

டீசர் குறித்து தயாரிப்பாளர்களின் விளக்கம் ஒரு வரியில் முடிகிறது :“It’s gonna get crazyyyy.”

திரையில் காணப்படும் வேகத்தையும், அதிரடியையும் பார்த்தால், மார்ச் 19, 2026 அன்று டாக்ஸிக் உலகம் அந்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றும் என்பது உறுதியாகத் தெரிகிறது.

இந்த டீசர் தமிழ், கன்னடம்,இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, உலகளாவிய வெளியீட்டுக்கு தயாராகிறது.

கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘டாக்ஸிக்’ திரைப்படம் – ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Natarajan Karuppiah

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

7 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

4 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago