சமீபத்தில் மறைந்த விக்ரம் சுகுமாரன் வீட்டிற்கு சென்ற தயாரிப்பாளர் கண்ணன் ரவி, “அவருடைய குடும்பம் எங்கள் குடும்பம் போல” என்று ஆறுதல் கூறி, ரூ. 5 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.
’மதயானை கூட்டம்’, ’இராவண கூட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன், திடீரென மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் காலமானார். அவருடைய மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி அவருடைய குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருந்தது.
இந்த நிலையில், விக்ரம் சுகுமாரன் இயக்கிய ’இராவண கூட்டம்’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி, அவருடைய குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இதற்கான காசோலையை கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவி, விக்ரம் சுகுமாரன் தாயாரிடம் வழங்கினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இழப்பு எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் திறமை, ஆர்வம் கொண்ட இயக்குனர். அவரது திறமையை முழுமையாக காணும் முன்பே அவரை இழந்தது பரிதாபமானது. அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும். விக்ரம் சுகுமாரன் குடும்பம் எங்கள் குடும்பம் போல தான்,” என்று தெரிவித்தார்.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…