விஜய் சேதுபதி படத்தில் நடிக்கவில்லை.. ‘கபாலி’ நடிகை அறிவிப்பு.. அவருக்கு பதில் யார்?

விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில், ’கபாலி’ படத்தில் நடித்த ராதிகா ஆப்தே நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் தற்போது அந்த படத்தில் நடிக்கவில்லை என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து, அவரது கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் முதலில் தபு நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதன் பின்னர், ராதிகா ஆப்தேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவரும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது ராதிகா ஆப்தே அந்த படத்தில் நடிக்கவில்லை என அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து, அவர் நடிக்க இருந்த கேரக்டரில் தற்போது நிவேதா தாமஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’, ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’, விஜய் நடித்த ’ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிவேதா தாமஸ், இந்த படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக விஜய்சேதுபதி மற்றும் பூரி ஜெகன்நாத் இணையும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

1 மாதம் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago