ரியோ ராஜின் அடுத்த அதிரடி – ‘ராம் IN லீலா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
மார்கழி 2, 2025 Published by anbuselvid8bbe9c60f

‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த கேள்விக்கு இன்று பதில் கிடைத்தது! நாயகனாக ரியோ ராஜ் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறது.
படத்தின் தலைப்பு: ராம் IN லீலா
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஒய்வா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் தொடங்கிவிட்டது. ‘இது வழக்கமான காதல் கதை இல்ல… எனது ராம் இன் லீலா மக்களே!’ என ரியோ தனது X பக்கத்தில் தீவிரமாக அறிவித்திருப்பது எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு ஏற்றியுள்ளது.
- நாயகி: வர்திகா ஜெயின்
- இயக்குநர்: ராமசந்திரன் கண்ணன்
- ஒளிப்பதிவு: மல்லிகா அர்ஜுன்
- இசை: அன்கிட் மேனன்
குறிப்பாக, ‘ஆண்பாவம் பொல்லாதது’ படப்பிடிப்பின் போது இயக்குநர் மிஷ்கின் “ரியோ ராஜ்னு இனி யாரும் சொல்லாதீங்க… ரியோனு மட்டும் சொல்லுங்க” என்று அறிவுறுத்தியது இன்று உண்மையாகியிருக்கிறது. அதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரியோ ராஜ் என்ற பெயருக்கு பதிலாக ரியோ என்று மட்டுமே கையெழுத்திட்டிருப்பது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வித்தியாசமான தலைப்பு, புதுமையான போஸ்டர் டிசைன், ரியோவின் புது அவதாரம் – எல்லாமே ‘ராம் IN லீலா’ ஒரு புத்தம் புதிய அனுபவமாக இருக்கும் என உறுதியாகச் சொல்கிறது. ரசிகர்கள் ஏற்கனவே #RamINLeela ட்ரெண்டை X-லில் ஆக்கிரமித்து கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர்!
ரியோவின் கேரக்டர் பயணத்தில் இது ஒரு மைல்கல்லாக அமையப் போகிறது என்பதில் ஐயமில்லை!
















